காதலனிடம் காதலி கேட்ட அந்த ஒரு விஷயம்..! இறுதியில் சூட்கேஸில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்...! அது மூலம் சிக்கிய காதலன்! திடுக்கிடும் பின்னணி!!!
ஒடிசாவை உலுக்கிய விஷாலினி கொலை வழக்கு தொடர்பாக முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவுட்சோர்சிங் கார் ஓட்டுநரான சுரேஷை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சடலத்தை சூட்கேஸில் அடைத்து மாநில எல்லையைத் தாண்டி கொண்டு சென்று வீசியதாகக் கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழக்கம் கொலையில் முடிந்ததாக குற்றச்சாட்டு
விசாரணையில் கிடைத்த தகவலின்படி, போலீஸ் துறையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த சுரேஷுக்கும், விஷாலினிக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து நெருக்கமாக இருக்க வேண்டும் என்றும் விஷாலினி வலியுறுத்தியதாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சூட்கேஸில் சடலத்தை மறைத்து சென்றதாக தகவல்
கொலைக்குப் பிறகு, விஷாலினியின் உடலை சூட்கேஸில் அடைத்து ஒடிசாவுக்கு கொண்டு சென்ற சுரேஷ், ராயகடா மாவட்டம் சாந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சடலத்தை வீசிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணையை முன்னெடுத்தனர்.
நவீன தொழில்நுட்பத்தில் சிக்கிய குற்றவாளி
தகவலின்படி, நவீன தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் தடயவியல் ஆய்வுகளின் உதவியுடன் சுரேஷ் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து கொலையின் முழு பின்னணி மற்றும் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!