தவெகவுடன் கைகோர்க்கும் மதிமுக? பளிச் பதில் அளித்த வைகோ.!



Will MDMK Join TVK? Vaiko Gives Clear Response on Alliance Rumors in Tamil Nadu

மதிமுக திமுக கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்விக்கு வைகோ பதில் அளித்தார்.

TN Election Result 2026: தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை தேர்தல் 2026 நிறைவுபெற்று, தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

vaiko

அரசியல் பரபரப்பு:

பல்வேறு அரசியல் கணிப்புகளுடன் நடந்த 2026 தேர்தலில், விஜயின் வெற்றி மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை நோக்கி தவெக தலைமை காய்களை நகர்த்தி வருகிறது. இந்நிலையில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தவெகவுடன் கூட்டணி செல்லலாம் என்ற அரசியல் பேச்சு எழுந்து வருகிறது. 

இதையும் படிங்க: செங்கோட்டையனின் அடுத்த அதிரடி சம்பவம்! தவெக விஜய்யுடன் இணையும் அதிமுக அமைச்சர்? அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி!

vaiko

வைகோ உறுதி:

இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது, "திமுக கூட்டணிக்கட்சிகள் எப்போதும் வேறொரு கட்சியை ஆதரிக்காது. நமது கூட்டணி எப்போதும் உறுதியான கூட்டணி. கூட்டணியை தவிர்த்து வேறு யாருடனும் திமுக கூட்டணிகள் தொடர்பில் இல்லை" என தெரிவித்தார். 

இதன் வாயிலாக விஜயின் கூட்டணிக்கு மதிமுக வராது என வைகோ உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக-அதிமுக வாக்குகள் பிரியுமா?.. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் தவெக.!