லைப் ஸ்டைல்

முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் பாம்புகள்! பார்ப்போரை சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ!!

Summary:

முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் பாம்புகள்! பார்ப்போரை சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ!!

முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவரும் விசத்தன்மை வாய்ந்த பாம்பின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.

பாம்புகள் என்றாலே படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் சிறு பாம்பை கண்டால் நடுக்கம் ஏற்பட தான் செய்கிறது. அப்படி இருந்தும் வினோதமான சில மக்கள் விஷத்தன்மை வாய்ந்த பல பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடிப்பது போன்ற வித்தியாசமான செயல்களால் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

மேலும் பாம்புகள் குறித்த வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகும். அந்த வகையில் தற்போது , chesterzoo என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் குட்டிப் பாம்புகள் முதல்முறையாக எப்படி முட்டையிலிருந்து வெளிவருகிறது என்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை சிலிர்க்க வைத்துள்ளது.


Advertisement