சாப்பிட உடன் தண்ணீர் குடிப்பது ஆபத்தானதா? எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?



Problems of drinking water while eating

நமது உடலுக்கு மிகவும் தேவையானதும், அவசியமானதும் தண்ணீர். தினமும் 5 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் பல்வேறு பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். இப்படி உடலுக்கு மிகவும் தேவையான தண்ணீரை உணவு அருந்தும்போது குடிப்பது சரியா? அப்படி குடிப்பதனால் ஏதேனும் பிரச்சனை வருமா? வாங்க பாக்கலாம்.

தண்ணீர் நமது உடலுக்கு எவ்வளவு அவசியமோ அதேபோல எப்போது தண்ணீரை குடிக்கவேண்டும் என்பதை தெரிந்துவைத்து குடிப்பதும் மிகவும் அவசியம். பொதுவாக உணவு அருந்தும்போது பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது.

Health tips in tamil

அப்படி சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதனால் ஜீரண கோளாறு ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும்.

இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். சாப்பிடும்போது தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்வது என கேட்கிறீர்களா? சாப்பிடும்போது தண்ணீர் தாக்கம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நமது கடமை. குறைந்தபட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் அருந்தலாம்.

அதேபோல் தண்ணீர் தாகம் எடுக்கும்போது தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

அதேபோல் குறைந்தபட்சம் சாப்பிட்டப்பின் இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம்.