சூடான சுவையான புதினா தக்காளி சட்னி.. இல்லத்தரசிகளே இன்றே செய்து அசத்துங்கள் .!!

சூடான சுவையான புதினா தக்காளி சட்னி வீட்டிலேயே எப்படி செய்வது என்று விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
புதினா - 1/2 கைப்பிடி
வரமிளகாய் - 5
புளி - சிறுநெல்லிக்காய் அளவு
இஞ்சி - சிறு துண்டு
சமையல் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
★பின் புதினா இலைகளை சுத்தம் செய்து, இஞ்சியை தோல் உரித்துக்கொள்ளவும்.
★அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் புளி மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்க வேண்டும்.
★அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
★பின் புதினா இலைகளை சேர்த்து சுருள வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
★இறுதியாக ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் புதினா தக்காளி சட்னி தயார்.