நாய்க்கறி சாப்பிடுவதால் எதுவும் பிரச்சனையா? இதை படிங்க விவரம் புரியும்.

நாய்க்கறி சாப்பிடுவதால் எதுவும் பிரச்சனையா? இதை படிங்க விவரம் புரியும்.



how to find difference between dog and goat meat

 சென்னை உணவகங்களில் நாய் கறி அதிக அளவில் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது .இதனால் மக்கள் ஹோட்டலில் சாப்பிடுவதற்கு அச்சப்படுகிறார்கள். 
நாய்க்கறி என்ற பெயரில் டன் கணக்கில் இறைச்சி கைப்பற்றப்பட்டதும் நாம் வெளியில் சாப்பிடுவது ஒருவேளை ஆட்டிறைச்சியாக இல்லாமல் நாய்க்கறியாக இருக்குமோ என்ற பயத்தில் உள்ளனர். அதனாலேயே சென்னையில் பிரியாணி மற்றும் அசைவ உணவுகள் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் உணவியல் நிபுணர்களோ எந்த இறைச்சியாக இருந்தாலும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றுதான் கூறுகிறார்கள்.

goat

இந்த நாய்க்கறி சர்ச்சைக்குப் பின், சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில்  மட்டன் உணவு வகைகளை சாப்பிடுவதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள். அதற்கான நாம் சாப்பிடாமலேயே இருக்க முடியாதல்லவா. சரி ஆடுக்கறிக்கும் நாய்க்கறிக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம் . 

goat
 
நாம் சா்பபிடும் அசைவ உணவுகளில் ஆட்டுக்கறி மிகவும் சுவையான ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலின் பல பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமைகிறது. முக்கியமாக வைட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, வைட்டமின் கே மற்றும் ஈ நிறைந்திருக்கின்றன. கோலைன், புரதம், நல்ல கொழுப்பு, அமினோ அமிலங்கள் மற்றும் ஜிங்க, காப்பர், கனிமச் சத்துக்கள் ஆகியவையும் இருக்கின்றன. இதனால் இதயம் பலப்படும். கருத்தரிக்காமல் இருப்பவர்கள் சிக்கன் பிரியராக இருந்தால், அதை விட்டுவிட்டு ஆட்டிறைச்சியை சாப்பிட ஆரம்பியுங்கள்.

goat
ஆட்டிறைச்சிக்கும் நாயிறைச்சிக்கும் உள்ள வித்தியாசம் :
வெள்ளாட்டின் கொழுப்பு நல்ல பால் நிறத்தில் வெண்மையாகவே இருக்கும். ஆனால் நாய்க்கறியின் கொழுப்பு சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். வெள்ளாடு சற்று வேகமாக வெந்துவிடும். ஆனால் நாய்க்கறி ஆடு மற்றும் மாட்டுக்கறியை விடவும் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் வேக நேரமெடுக்கிறது. வெள்ளாட்டு இறைச்சி சற்றே இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் இருக்கும். ஆனால் நாய்க்கறியோ ரெட் மீட் வகையைச் சேர்ந்தது. மாட்டிறைச்சியைக் காட்டிலும் அடர்ந்த நிறமுடையது. ஆட்டிறைச்சியில் எலும்புகள் வெந்ததும் மென்மையாகிவிடும். ஆனால் நாய்க்கறியில் எலும்புகள் நொறுங்காது. மிக உறுதியாக இருக்கும். அதேபோல் வாசனையில் நாய்க்கறியில் கொழுப்பு மிகுதி என்பதால் இறைச்சியின் மணம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் வெள்ளாட்டுக் கறியில் அந்த வெள்ளாட்டு ரோம வாசனையை சாப்பிட்டு விழுங்கும்போது உணர முடியும். இந்த வித்தியாசங்களை வைத்தே ஆட்டிறைச்சிக்கும் நாய்க்கறிக்குமான வித்தியாசங்களை நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். ஆட்டிறைச்சி வெந்ததும் லேசாக நிறம் மாறியிருக்கும். ஆனால் நாய்க்கறி பன்றி இறைச்சியைப் போன்று வெந்ததும் பிரௌன் கலருக்கு மாறிவிடும்.