பலரும் வேண்டாம் என ஒதுக்கும் கருணை கிழங்கில் சுவையான பஜ்ஜி செய்வது எப்படி...

பலரும் வேண்டாம் என ஒதுக்கும் கருணை கிழங்கில் சுவையான பஜ்ஜி செய்வது எப்படி...


Healthy snacks karunaikilanku baji recipe

பெரும்பாலானவர்கள் கருணை கிழங்கை விரும்பி சாப்பிடாமல் ஒதுக்கி விடுவார்கள். ஆனால் கருணைக் கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் கட்டுப்படும். வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும்.

கருணைக் கிழங்கில் பஜ்ஜி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம். 
தேவையான பொருட்கள்: 
கருணை கிழங்கு - 250 கிராம்

கடலை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

கரமசாலா - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்பKarunaikilanku baji

 

முதலில் கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,  மிளகாய் தூள், அரிசி மாவு, கரமசாலா, உப்பு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இப்போது சூப்பரான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.