ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!



Health benefits of cardamom water drinking

நமது வீட்டு சமையலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஏலக்காய். பொதுவாக அனைவரும் ஏலக்காய் பயன்படுத்துவது நறுமணத்திற்காக என நினைக்கின்றனர். ஆனால் ஏலக்காய் நறுமணத்திற்காக மட்டுமில்லாமல், செரிமானத்திற்கும் உதவுகிறது.

அதன்படி ஏலக்காய் பாரம்பரியமாக நாட்டு மருத்துவத்தில் ஒரு சில பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்க பயன்படுகிறது. அதன்படி ஏலக்காயில் உள்ள சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிம சக்திகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

Cardamom powder

குறிப்பாக ஏலக்காயை சமையலில் பயன்படுத்துவதை விட காலையில் எழுந்ததும் அதனை நேரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எனவே வெறும் வயிற்றில் ஏலக்காய் நீரை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் காலையில் எழுந்ததும் டீ மற்றும் காபிக்கு பதிலாக ஏலக்காய் நீரை குடித்தால் செரிமான அமிலத்தின் உற்பத்தியை தோண்டும். மேலும் செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கல் அஜீரணக் கோளாறு போன்றவற்றை தடுக்கும்.

Cardamom powder

குறிப்பாக உடலை சுத்தம் செய்ய ஒரு அற்புதமான பானம் என்றால் ஏலக்காய் நீர் தான். அதன்படி காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் நீரை குடிப்பதால் ஏலக்காயில் உள்ள டையூரிக் பண்புகள் உடலை சுத்தம் செய்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் சர்ம பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் ஏலக்காய் நீரை குடிப்பதால் நல்ல பலன் அளிக்கிறது. குறிப்பாக சருமத்தில் ஏற்படும் சேதத்தை தடுத்து பாதுகாக்க உதவுகிறது.