லைப் ஸ்டைல்

இதுதான் உனக்கு வேலையா.! லபகென தூக்கிட்டு போன தாய் குரங்கு.! வைரலாகும் வீடியோ.!

Summary:

Gorilla cub playing video goes viral

குழந்தைகள் என்றாலே விளையாட்டு, சேட்டை என அனைவரையும் மகிழ்விப்பார்கள். அது சிறுவயது குழந்தையாக இருந்தாலும் சரி, குட்டி விலங்காக இருந்தாலும் சரி. சேட்டை, குறும்பு என்பது அனைவர்க்கும் ஒன்றுதான்.

அந்த வகையில், குட்டி சுவர் ஒன்றின் மீது ஏறி நிற்கும் கொரில்லா குட்டி ஓன்று, அங்கு போடப்பட்டிற்கும் வைக்கோல் மீது குதித்து குதித்து விளையாடுகிறது. சுப்ரியா சாகு என்ற IAS அதிகாரி ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

36 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், குட்டி குரங்கு மகிழ்ச்சியாக குதித்து குதித்து விளையாடுகிறது. பின்னர், உனக்கு எப்போதும் விளையாட்டுதான் என்பதுபோல, அங்கு வரும் தாய் குரங்கு குட்டி குரங்கை தூக்கி கொண்டு செல்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement