இந்தியர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை.. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்..!



Climate Change Causing Severe Sleep Loss in India, Study Reveals

பருவநிலை மாற்றம் உட்பட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் தூக்கமின்மை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

93 மணிநேரம்: 

இந்தியா உட்பட உலகளவில் பருவநிலை மாற்றம் காரணமாக இரவு நேரத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் தங்களின் உறக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். அமெரிக்கா நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் இருக்கும் பெருநகரங்களில் வசித்து வரும் நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் 93 மணிநேரம் அளவிலான உறக்கத்தை இழப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: அன்றாடம் நாம் செய்யும் இந்த பழக்கத்தால்.. வாழ்க்கையே சீரழியும் .. உஷார்.!

health tips

சென்னை முதலிடம்: 

இந்த பட்டியலில் சென்னை 93 மணிநேர உறக்க இழப்புடன் முதல் இடத்தில் இருக்கிறது. மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்கள் அடுத்த பட்டியலில் இருக்கின்றன. பகலில் ஏற்படும் வெப்ப அழுத்தம் மக்களின் தூக்க சுழற்சியை கேள்விக்குறியாக்குகிறது. போதிய தூக்கமின்மையால் மனஅழுத்தம், சோர்வு, வேலைத்திறன் குறைவு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. 

இந்த பிரச்சனைகள் பக்கவாதம், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. 

இதையும் படிங்க: இந்தியர்களை குறிவைத்து மெகா சம்பவம்.. வெளியான ஷாக் தகவல்.! முழுவிபரம்..!