அது பொண்ணா? இல்ல பொம்மையா... இப்படி பண்றாரு! பெண்ணை அடித்து முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்ற போலீஸ்காரர்...!அதிர்ச்சி வீடியோ..!!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹபீஸ்பேட் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவரை சீருடையில் இருந்த காவலர் ஒருவர் லத்தியால் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. வெள்ளிக்கிழமை இரவு நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வீடியோவில், அந்த காவலர் பெண்ணை லத்தியால் தாக்குவதுடன், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பெண் தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக கூறப்பட்டாலும், சீருடையில் இருந்த நபர் பயன்படுத்திய வன்முறை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: சாவிலும் பிரியாத உண்மை காதல்! உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் காதலர்கள்...? வைரலான வீடியோவால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!
வைரலான வீடியோ குறித்து RPF விசாரணை
காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தாக்குதலில் ஈடுபட்டவர் ஹபீஸ்பேட் ரயில் நிலையத்தில் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த தெலங்கானா மாநில காவல் துறையின் ஹோம் கார்டு என்பது தெரியவந்தது.
தெலங்கானா காவல்துறையிடம் ஒப்படைப்பு
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஹோம் கார்டை தெலங்கானா காவல் துறையிடம் RPF நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில காவல் துறை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த நபர் பெண்ணை தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
A video purportedly showing a policeman beating a woman with a baton and dragging her by her hair outside Hafeezpet Railway Station on Friday night has drawn condemnation.
— Hate Detector 🔍 (@HateDetectors) September 19, 2026
The video, which was circulated on social media, shows the uniformed personnel allegedly beating the woman… pic.twitter.com/3TXdropc3P
இதையும் படிங்க: ஐயோ... புள்ள வலி தாங்க முடியாமல் துடிக்குது! அலறி துடித்த மாணவி... . தனியார் பள்ளி ஆசிரியரின் வெறிச்செயல்! கண் கலங்க வைக்கும் காட்சி!!!