சாவிலும் பிரியாத உண்மை காதல்! உயிருடன் மண்ணில் புதைக்கப்படும் காதலர்கள்...? வைரலான வீடியோவால் இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!



viral-video-fake-lovers-buried-movie-shooting

இரவில் ரகசியமாகச் சந்தித்த காதலர்களை கிராம மக்கள் பிடித்து தாக்கியதாகவும், மறுநாள் இருவரையும் உயிருடன் மண்ணில் புதைக்க முயன்றதாகவும் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. குறிப்பாக எக்ஸ் தளத்தில் இந்த காட்சிகள் பல்வேறு தவறான தலைப்புகளுடன் பகிரப்பட்டன. இதனால், வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

வைரலான வீடியோவில் கூறப்பட்ட தகவல் என்ன?

வீடியோவில் ஒரு ஆண் மற்றும் பெண்ணை சிலர் பிடித்து வைத்திருப்பதும், அவர்களை தாக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இதனை வைத்து, காதலர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததாகவும், பின்னர் இருவரையும் மண்ணில் புதைக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. வைரல் வீடியோவுக்கு “சாவிலும் பிரியாத உண்மைக் காதல்” உள்ளிட்ட தலைப்புகளும் பயன்படுத்தப்பட்டன.

இதையும் படிங்க: பெண் பயணியிடம் டிக்கெட் கேட்ட TTE....! அடுத்த நொடி ஆடையைக் கிழித்துக் கொண்டு பெண் செய்த அதிர்ச்சி காரியம்.... வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை..!!!

ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை

வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து நெட்டிசன்கள் மற்றும் ஃபேக்ட் செக் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதில் பரப்பப்பட்ட தகவலுக்கும் உண்மைக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்தது. அந்தக் காட்சிகள் நிஜ சம்பவத்தைச் சேர்ந்தவை அல்ல. மாறாக, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் என்பது கண்டறியப்பட்டது.

உண்மை சரிபார்க்காமல் பகிர வேண்டாம்

திரைப்படப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சியை நிஜ சம்பவமாகச் சித்தரித்து, தவறான தகவல்களுடன் சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோன்ற வீடியோக்களை பகிர்வதற்கு முன்பு அவற்றின் பின்னணி மற்றும் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். Fake News பரவுவதைத் தடுக்க, சந்தேகத்துக்குரிய பதிவுகளை உடனடியாகப் பகிராமல் இருப்பது அவசியம்.

 

இதையும் படிங்க: நீதிமன்றத்தில் மாதம் 6 லட்சம் ஜீவனாம்சம் கேட்ட மனைவி! ஆனால் கணவன் போட்ட பலே திட்டம்.... இறுதியில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!!