தமிழகம் லைப் ஸ்டைல் சமூகம்

10 நாட்கள் வாடகைக்கு அறையெடுத்து உல்லாசம்; பணக்கார மருத்துவரை ஏமாற்றிய இளைஞர்..!!

Summary:

10 days enjoyed in hotel room

சேலத்தில் என்ஜினீயர் ஒருவர் மகாராஷ்டிரா பெண்ணுடன் 10 நாட்கள் விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் மருத்துவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது என்ஜினீயருடன் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

தொடர்புடைய படம்

எத்தனை நாட்களாக பார்க்காமலே தூரத்தில் இருந்து காதலிப்பது என்று எண்ணிய அவர்கள் நேரில் சந்திக்க முடிவு செய்தார் என்ஜினீயர். என்ஜினீயர், தனது ஆசையை பெண் டாக்டரிடம் தெரிவிக்கவே அவரும் உடனே அதற்கு சம்மதித்துள்ளார். பின்னர் அந்த பெண் டாக்டர் தனது பெற்றோரிடம் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டார்.

அங்கிருந்து சேலத்திற்கு வந்த பெண் டாக்டரை காரில் சென்று வரவேற்ற என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்க வைத்தார். அந்த ஓட்டலில் கணவன்-மனைவி போல 10 நாட்கள் தங்கியிருந்த அந்த இளம் ஜோடியினர் உல்லாசமாக பொழுதை கழித்தனர்.

தொடர்புடைய படம்

இந்த நிலையில் நேற்றிரவு சாப்பிடுவதற்காக அந்த ஓட்டலின் ரெஸ்டராண்டுக்கு அவர்கள் வந்த பொது திடீரென அந்த பெண் டாக்டர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜினீயர் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.அப்போது தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதாகவும், வி‌ஷம் குடித்ததாகவும் மாறி, மாறி கூறினார்.

உடனடியாக ஹோட்டல் நிர்வாகிகள் காவ துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் அந்த பெண்ணை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு அந்த என்ஜினீயரின் வீட்டிற்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அவரது உறவினர்கள் அங்கு குவிந்தனர்.

பிறகு விசாரணையை துவங்கிய காவல் துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விசாரணையில் பல உண்மைகள் வெளியானது. அதாவது அந்த பெண் மருத்துவர் மஹாராஷ்டிராவில் ஒரு பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவருடைய தந்தையும் ஒரு மருத்துவர் என்றும் தெரிய வந்தது. அவரை பேஸ்புக் மூலம் வசியப்படுத்தி சேலத்திற்கு வரவழைத்து ஹோட்டலில் ரூம் போட்டு 10 நாட்கள் அந்த வாலிபர் பெண் மருத்துவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். 

தொடர்புடைய படம்

மேலும் 25 லட்சத்தை செலவுக்கு வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். ஹோட்டல் கட்டணத்தையும் அந்த பெண் டாக்டரே கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண் மருத்துவர் அதிக அளவில் தூக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளார். 

இந்த தகவல் அவரது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு சேலத்திற்கு விரைந்து வந்தனர். பெண்ணை கல்யாணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர் மீது பாலியல் பலாத்கார புகார் பதிவு செய்ய முடிவு செய்தது.மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


Advertisement