இந்தியா

ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள்! வித்தியாசமான முறையில் கிராமத்தினர் எடுத்த முடிவு! சினிமாவையே மிஞ்சிய சம்பவம்!!

Summary:

கர்நாடகாவில் ஒரு இளைஞரை இரு பெண்கள் காதலித்த நிலையில், கிராமத்தினர் டாஸ் போட்டு ஜெயித்தவரை

கர்நாடகாவில் ஒரு இளைஞரை இரு பெண்கள் காதலித்த நிலையில், கிராமத்தினர் டாஸ் போட்டு ஜெயித்தவரை அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்பூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்துள்ளார். அதாவது முதலில் அவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து ஊர் சுற்றி வந்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் கடந்த 6 மாதமாக மற்றொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்தப் பெண்களுக்கு தெரியவந்த நிலையில் இருவரும் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள பிடிவாதமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இப்பிரச்சினையை தீர்க்க கிராமத்து பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் இரு பெண்களுமே தாங்கள் அந்த இளைஞனை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறி விட்டுக்கொடுக்க முன்வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் என்ன செய்வது என புரியாமல் குழம்பிய பஞ்சாயத்தினர் டாஸ் போட்டு பார்த்து ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி டாஸ் போட்டு பார்த்து ஒருபெண்ணை மட்டும் தேர்வுசெய்து அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஏமாந்துபோன பெண் டாஸ் போட்டதில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாராம். இந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement