தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!. சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை!!

மும்பை ஓஷிவாராவை சேர்ந்தவர் ராகுல் திக்சித். பிரபல தொலைக்காட்சி நடிகரான இவருக்கு கடந்த சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் மனமுடைந்துள்ளார் நடிகர் ராகுல் திக்சித்.
இந்நிலையில், மிகவும் மன உளைச்சலுடன் இருந்த நடிகர் ராகுல் திக்சித் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த குடியிருப்பு பகுதியினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடிகர் ராகுல் திக்சித்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நடிக்க வாய்ப்பு இல்லாமல் மனஉளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறினர்.