இந்தியா - சீனா எல்லையில் நடந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தாதது ஏன்?

இந்தியா - சீனா எல்லையில் நடந்த சண்டையில் துப்பாக்கி பயன்படுத்தாதது ஏன்?


why not use gun in india china border fight

இந்தியா சீனா எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த செய்தி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் சீனாவின் அத்துமீறலுக்கு முதல் முறையாக இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.

India

சீனா பல முறை இந்திய எல்லைக்குள் வந்து இந்திய வீரர்களை சீண்டி சென்றுள்ளது. இந்த சீண்டலுக்கு காரணம், இந்திய வீரர்களை அவர்கள் பலவீனமாக நினைத்தது தான். ஆனால் இந்த முறை இந்தியா சீனாவிற்கு கொடுத்த பதிலடியால் சீனா தற்போது திகைத்துள்ளது.

எல்லையில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறுவது வழக்கம். ஆனால் அப்போது அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் வரிசையில் நின்று, ஆயுதங்களை பயன்படுத்தாமல் இது எங்கள் பகுதி, உள்ளே வரக்கூடாது என்று கூறி தடுத்து அனுப்புவார்கள். இருநாட்டு ஒப்பந்தப்படி எல்லைக்கோடு அருகே ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்பதால் வீரர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதத்தை பயன்படுத்தாமல் சண்டையிட்டுள்ளனர்.