இந்தியா

6 வயது சிறுமியை சீரழித்து கொலை செய்த கொடூரன்.! நாட்டை உலுக்கிய சம்பவத்தில் அதிரடி திருப்பம்.! குற்றவாளி பிணமானான்

Summary:


ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் குற்றவாள


ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியை பொலிசார் கைது செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் அதிரடி திருப்பமாக அவன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் கடந்த 9ஆம் தேதி 6 வயதான சிறுமியை பள்ளிகொண்டா ராஜூ என்பவன் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளான். இவனை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடிவந்தனர். ஆனால் இதுவரை அவர் பிடிபடாததால், தகவல் தெரிவிப்பவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்த நிலையில் கொடூரன் பள்ளிகொண்டா ராஜூ கன்பூர் ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான், இந்த தகவலை அமைச்சர் கே.டி.ஆர் உறுதி செய்துள்ளார். அவர் ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement