கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
சீனாவில் என்னதான் நடக்குது... அதிகரிக்கும் காய்ச்சல்..16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள்..!

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கண்டறிந்து அதை தடுக்கும் முயற்சியாக சீனா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் அமைத்து நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் சீனாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமெடுத்து மக்களிடையே பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழியும் வண்ணம் உள்ளது. மேலும் நோயாளிகள் சிகிச்சைக்காக காத்து கிடக்கும் நிலையை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 16 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.