வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! இனி நீங்களும் ஓட்டு போடலாம்.?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! இனி நீங்களும் ஓட்டு போடலாம்.?


voting-system-for-expatriate-indians

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாக அல்லாமல் நாமினி ஒருவரை நியமித்து வாக்களிக்கலாம். அல்லது எந்த நாட்டில் உள்ளனரோ அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச்சாவடிகள் வைத்து வாக்களிக்கலாம். அல்லது தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் லிங்க் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க செய்யலாம் என்ற மூன்று முறைகள் பரிந்துரைக்கப்பட்டன.

vote

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் பதில் கடிதம் எழுதியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பலர், தேர்தல்களில் வாக்களிக்க தங்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.