திடீரென வேகம் எடுத்த பிரச்சார வாகனம்... தடுமாறி விழுந்த பாலகிருஷ்ணா.... பரபரப்பு...!
திடீரென வேகம் எடுத்த பிரச்சார வாகனம்... தடுமாறி விழுந்த பாலகிருஷ்ணா.... பரபரப்பு...!

எம்எல்ஏவும் நடிகருமான பாலகிருஷ்ணா அவரது சொந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
நடிகர் பாலகிருஷ்ணா தனது சொந்த தொகுதியான இந்துபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாலகிருஷ்ணா பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்து அவர்களுடைய ஆரவாரங்களை ஏற்றுக்கொண்டார்.
அப்போது மெதுவாக சென்று கொண்டிருந்த அவரது பிரச்சார வாகனத்தை சற்று வேகம் கூட்டியதால், வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். பாலகிருஷ்ணா பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.
இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து சற்று நேரம் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அவருடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார்.