பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
என் மகளை உன்கூட அனுப்ப மாட்டேன்! மாமனாருக்கும் மருமகனுக்கும் தகராறு.. தடுக்க வந்த மனைவியின் மூக்கை கிள்ளி எரிந்த கணவன்! பகீர் சம்பவம்..!!!
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில் வரதட்சணை தொடர்பான தகராறு விபரீதமாகியுள்ளது. மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த கணவன், மாமனாருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற மனைவியின் மூக்கை அவர் ஆத்திரத்தில் பிடித்து கிள்ளியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்; இரண்டு பெண் குழந்தைகள்
மல்லம்பேட்டையைச் சேர்ந்த மணிசந்தர் என்பவருக்கும் மமதா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மணிசந்தர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, கூடுதல் வரதட்சணை கேட்டு மமதாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! கல்யாணமாகி சில வாரங்கள் தான் ஆகுது... புதுமணத்தம்பதிக்கு நடந்த கொடூரம்! கதறி துடிக்கும் குடும்பத்தினர்...!!!
கணவரின் தொடர் தொல்லையால் மனவேதனை அடைந்த மமதா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கொத்தபள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.
மாமனாருடன் தகராறு; தடுக்க வந்த மனைவிக்கு காயம்
இந்த நிலையில், மமதாவை மீண்டும் அழைத்துச் செல்வதற்காக மணிசந்தர் தனது குடும்பத்தினருடன் கொத்தபள்ளியில் உள்ள மாமனார் நாராயணன் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் நாராயணனை மணிசந்தர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது தந்தையை காப்பாற்ற மமதா குறுக்கிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிசந்தர், அவரது மூக்கை பிடித்து பலமாக கிள்ளியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் மமதா அலறியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை;
காயமடைந்த மமதாவை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு வராங்கல் எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரதட்சணைக் கொடுமை தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், தற்போது நடந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொத்தபள்ளி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் சேகரித்து வருகிறார். கணவன் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தகராறுக்கான காரணம் மற்றும் தாக்குதல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலிரவில் திடீரென காணாமல் போன மணமகன்… மனைவி கூறிய ஒரு வார்த்தைக்குப் பிறகு நடந்த அதிர்ச்சி!