"வினையான சந்தேகம்.." கர்ப்பிணி மனைவி துண்டு துண்டாக வெட்டி கொலை.!! கணவன் கொடூர செயல்.!!



suspicious-husband-brutally-murders-pregnant-wife-cut-h

தெலுங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ள அவரது கணவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமிருந்ததால் அவரை கொலை செய்ததாக தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் விகராபாத் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் ரெட்டி என்பவர் ஜோதி என்ற பெண்ணை காதலித்தார். இதனை தொடர்ந்து கடந்த வருடம் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது. இதன் பிறகு போடுப்பாவில் வாடகைக்கு வீடெடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற அவர்களது குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனது கணவர் தன்னை கொடுமை செய்வதாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார் ஜோதி. அப்போது ஊர் பெரியவர்கள் இருவருக்குமிடையே சமரசம் பேசி அவர்களை மீண்டும் சேர்த்து வாழ அறிவுறுத்தி இருக்கின்றனர்.

India

இதன் பிறகு தனது கிராமத்திற்கு அருகே கால் சென்டரில் வேலைக்கு சென்றிருக்கிறார் ஜோதி. அப்போது அவரது நடத்தையில் சந்தேகம் கொண்ட மகேந்திரன் ரெட்டி மனைவி வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜோதி கர்ப்பமடைந்துள்ளார். இதன் பிறகும் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 22 ஆம் தேதி தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென ஜோதி தெரிவித்திருக்கிறார். இதற்கு மகேந்திரன் ரெட்டி மறுப்பு தெரிவித்த போது மீண்டும் குடும்ப வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உயிரை பறித்த கள்ள உறவு... 2 பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை.!! காதலன் வெறி செயல்.!!

அப்போது கோபத்தின் எல்லைக்கே சென்ற மகேந்திரன் ரெட்டி தனது மனைவியை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது கர்ப்பிணி மனைவியின் உடலை கத்தியால் துண்டு துண்டாக வெட்டிய மகேந்திரன் ரெட்டி உடல் பாகங்களை ஆற்றில் வீசி விட்டு சில பாகங்களை தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். மேலும் தனது மனைவியின் சகோதரிக்கு போன் செய்து அவரை காணவில்லை என்று நாடகமாடியிருக்கிறார். மகேந்திரன் ரெட்டியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரது மனைவியின் சகோதரி, காவல் துறையிடம் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மகேந்திரன் ரெட்டியிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிலிருந்த உடல் பாகங்களை கைப்பற்றிய காவல் துறையினர் ஆற்றில் வீசப்பட்ட உடல் பாகங்களையும் மீட்பு குழுவின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் வெறி.!! "கணவனை கொன்று பாம்பை கடிக்க விட்ட கொடூரம்..." மனைவி, காதலன் கைது.!!