ஒரே கட்டிலில் அண்ணன், தங்கை.. போர்வைக்குள் பதுங்கியிருந்த ஜந்துவால் நேர்ந்த சோகம்!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தங்கையை போர்வைக்குள் பதுங்கியிருந்த விஷப்பாம்பு கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது அண்ணன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அண்ணன் பங்கஜ் மற்றும் அவரது 10 வயது தங்கை காமினி ஆகியோர் ஒரே கட்டிலில் தூங்கியுள்ளனர்.
அப்போது போர்வைக்குள் மறைந்திருந்த விஷப்பாம்பு முதலில் காமினியைக் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதே கட்டிலில் இருந்த பங்கஜின் காலிலும் பாம்பு சுற்றிக்கொண்டு கடித்ததாக தெரிகிறது. இருவரும் வலியால் அலறிய சத்தம் கேட்டு குடும்பத்தினர் உடனடியாக அங்கு ஓடி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பிச்சை தர மறுத்த பெண்.. மூக்கை குறிவைத்த மர்ம நபர்.. புதருக்குள் தள்ளி கொடூர சம்பவம்!
பாம்பு கடித்ததில் பாதிக்கப்பட்ட இருவரையும் குடும்பத்தினர் மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதும், 10 வயது சிறுமி காமினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, பங்கஜின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை விஷப்பாம்பு கடித்ததில் சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போய் செத்துத் தொலை.. கணவன் சொன்ன வார்த்தையால் விபரீத முடிவு.. 14 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீண்ட பெண்!