என்னையும் கைது செய்யுங்கள்.! பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பரபரப்பு சவால்.!Rahul Gandhi challenges Prime Minister Modi

நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடியை கண்டித்து டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. 

அந்த போஸ்டரில், "மோடிஜி" எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசியை ஏன் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தீர்கள்? என அச்சிடப்பட்டு இருந்தது. அவ்வாறு ஒட்டப்பட்ட போஸ்டர்களால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக டெல்லியில் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். 

இந்தநிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “என்னையும் கைது செய்யுங்கள்” என்று ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ராகுல்காந்தி டுவிட் செய்துள்ளார். மேலும் மோடி-ஜி, எங்கள் குழந்தைகளின் தடுப்பூசி ஏன் வெளிநாடு சென்றது? என்ற சுவரொட்டியை அவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.