நான்கு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாரை பொதுமக்கள் என்ன செய்துள்ளனர் தெரியுமா? வைரல் வீடியோ!

நான்கு குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசாரை பொதுமக்கள் என்ன செய்துள்ளனர் தெரியுமா? வைரல் வீடியோ!


Public appreciation to encounter police

 

தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து இந்த வழக்கு சம்மந்தமாக முகமது பாஷா, நவீன், சிவா, சின்ன கேசவலு ஆகிய நான்கு கொடூர கொலை குற்றவாளிகளை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் நான்கு பேரும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

police

மருத்துவ பெண் கொலை வழக்கில் 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைதான 4 பேரையும் சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார்அழைத்து சென்றபோது, குற்றவாளிகள் நான்கு பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து குற்றவாளிகளை போலீசார், சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த தண்டனை சரியானது என ஒட்டுமொத்த மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்லூரி மாணவ, மாணவிகளும், மருத்துவர்களும், பொதுமக்களும் குற்றவாளிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருப்பதற்காக பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தெலுங்கானா மக்கள் என்கவுண்டர் செய்த போலீசாரை தூக்கி தோளில் வைத்து கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.