அரசியல் இந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது.? மருத்துவமனை வெளியிட்ட தகவல்!

Summary:

pranab mukherjee health condition


முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பிரணாப் முகர்ஜி கடந்த 9- ஆம் தேதி உடல்நல கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து அவரது மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு மருத்துவமனையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்து வந்தநிலையில், அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் நிலையாக இருப்பதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியது.
 


Advertisement