"புதரில் மீட்கப்பட்ட டாக்டர் சடலம்... " கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்.!!



physician-from-bihar-murdered-by-wife-for-opposing-affa

பீகார் மாநிலத்தில் கள்ளக்காதலில் இருந்த மனைவி கணவனின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முராரி. மருத்துவரான இவருக்கு திருமணமாகி குமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் மருத்துவர் முராரியின் உடல் முட்புதரிலிருந்து மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினரின் சந்தேகம் முராரியின் மனைவியான குமாரியின் பக்கம் திரும்பியது.

India

இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரித்ததில் பிரின்ஸ் என்ற நபருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து முட்புதரில் வீசியது தெரிய வந்திருக்கிறது. பிரின்ஸ் என்பவர் முராரியின் மருத்துவமனையில் பணியாளராக வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கும் குமாரிக்குமிடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது உறவு பற்றி தெரிந்து கொண்ட முராரி தனது மனைவியை கண்டித்திருக்கிறார். மேலும் கள்ள உறவை விட்டுவிடுமாறு வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: "என் கூட வரமாட்டியா...." உறவுக்கு அழைத்த கணவன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் வெறி செயல்.!!

இதனால் ஆத்திரமடைந்த குமாரி தனது கள்ளக்காதலன் பிரிண்ஸை வரவழைத்து முராரியை கொலை செய்து அவரது உடலை புதரில் வீசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து குமாரி மற்றும் பிரின்ஸ் ஆகியோரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: "விடாமல் துரத்திய கள்ளக்காதல்..." கழுத்தை நெரித்து கணவன் கொலை.!! மனைவி, காதலன் வெறி செயல்.!!