இந்தியா

பெற்ற மகளையே தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெற்றோர்! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

parents using daughter for cheat


கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு 21 வயது மகள் இருந்துள்ளார். இவருக்கு பல் தொடர்பான பிரச்னை இருந்ததால் இணையம் வழியாக இளம் பல் மருத்துவரை சந்தித்துள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவரும் ஒரு லாட்ஜுக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அந்த லாட்ஜிற்கு வந்து இருவரையும் கையும்களவுமாக பிடித்து, அந்த பல்மருத்துவரின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை வாங்கிக்கொண்டு, தங்கள் மகளை அழைத்துச் சென்றனர்.

சில நாட்களில் அந்த பல் மருத்துவரின் தாய்க்கு தொடர்பு கொண்டு, உங்களுடைய மகனும், எங்களுடைய மகளும் நெருக்கமாக இருக்கும் வீடியோ உள்ளது ரூ .1 கோடி கொடுத்தால் இந்த பிரச்னையைத் தீர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, ஊடகங்களுக்கு பரவும். மேலும் காவல்துறையில் புகார் அளிப்போம் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பல் மருத்துவரின் தாய் அந்த தம்பதியினர் இருவரையும் தனியாக ஒரு ஓட்டலில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தங்களுடைய மகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ரூ.22 லட்சத்திற்கு காசோலை கொடுத்துள்ளார் பல் மருத்துவரின் தாய். அதனை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பிய தம்பதி மறுநாள் போன் செய்து, கர்ப்பத்தை கலைக்க வேண்டும் எனக்கூறி மீண்டும் பணம் கேட்டுள்ளனர். இவ்வாறு தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த பல் மருத்துவரின் தாய் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த தம்பதியினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
 


Advertisement