கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் உயிரிழப்பு... அச்சத்தில் பொதுமக்கள்...

கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் உயிரிழப்பு... அச்சத்தில் பொதுமக்கள்...


one-member-died-by-affect-of-monkey-ammai-in-kerala

நாடு முழுவதும் குரங்கு அம்மை என்ற புதிய வைரஸ் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது குரங்கு அம்மையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த 22 வயது இளைஞர் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து அவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 30 ஆம் தேதி உயிரிழந்தார். அந்த இளைஞரின் இறப்பிற்கு குரங்கு அம்மை தான் காரணமா என சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது அந்த ஆய்வில் அந்த இளைஞர் குரங்கு அம்மை தொற்றால் தான் உயிரிழந்ததாக உறுதியாகியுள்ளது. அந்த இளைஞர் கேரளா வருவதற்கு ஒரு நாள் முன்பு தான் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.