உடல் உறுப்பு தானம்! ஓவியங்கள் பரிசு! தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகளின் கடைசி விருப்பங்கள்!

உடல் உறுப்பு தானம்! ஓவியங்கள் பரிசு! தூக்கிலிடப்பட்ட நிர்பயா குற்றவாளிகளின் கடைசி விருப்பங்கள்!



nirbhaya-accust-last-wish

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஏழு வருடத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 5.30 மணியளவில் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சுமார் முப்பது நிமிடங்கள் அவரது உடல்கள் தூக்கில்  தொங்கவிடப்பட்டு,  பின்னர் இறந்துவிட்டனரா என மருத்துவர்களால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

Nirphaya

 

இந்நிலையில் திஹார் சிறையின் மூத்த அதிகாரி கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு குற்றவாளியின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளி அக்சயின்  உடலை அவரது உறவினர்கள் பீகார் அவுரங்காபாத் அருகேயுள்ள கிராமத்துக்குக் கொண்டு சென்றனர். முகேஷின் உடலை பெற்றோர்கள் ராஜஸ்தான் மாநிலத்துக்குக் கொண்டு சென்றனர். வினய் குமார், பவன் குப்தா  உடல்கள் தெற்கு டெல்லி, ரவிதாஸ் கேம்ப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவர்களில் குற்றவாளி முகேஷ் சிறை கண்காணிப்பாளரிடம் தூக்கிலிடுவதற்கு முன்பாக தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வினய் குமார் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன், சிறையில் தான் வரைந்த ஓவியங்களில் அனுமன் மந்திரம் தொடர்பான ஓவியத்தை சிறைக் கண்காணிப்பாளருக்கும், மற்றொரு ஓவியத்தைத் தனது குடும்பத்தினருக்கும் வழங்க விரும்புவதாக கூறியுள்ளார்.

ஆனால்  பவன் குப்தா, அக்சய் குமார் இருவரும் தங்களின் கடைசி ஆசைகளை கூறாமலேயே தூக்கு மேடைக்கு சென்றனர் என தெரிவித்துள்ளார்.