இந்தியா

வீரர்களின் தியாகம் வீண்போகாது! இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்! பிரதமர் மோடி பதிலடி!

Summary:

Modi warning to china

இந்திய பிரதமர் மோடி கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து முதல்வர்களிடமும்  காணொளியின் மூலம் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறார். மேலும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாகவுள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து இன்று கொரோனா  அதிகம் பாதிக்கப்பட்ட 15 மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதும், லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில்  மரணமடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, லடாக் எல்லையில் உயிர் நீத்த 20 இந்திய  வீரர்களின் தியாகம் வீண் போகாது. இந்தியா அமைதியை விரும்பும் நாடுதான்.ஆனால் எங்களை யாரும் சீண்டினால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் சக்தி எங்களுக்கு உண்டு. 

எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் என பதிலடி கொடுத்துள்ளார். 


Advertisement