இலங்கை தேர்தல் முடிவு! வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி! மோடிக்கு நன்றி தெரிவித்த மகிந்த ராஜபக்ச!



 modi appreciate rajapaksa

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுது.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். 

இந்தநிலையில் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என 4 முக்கிய கட்சிகள் போட்டியிட்டன.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி வெற்றியை உறுதி செய்யும் அளவில் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பிரதமராக மகிந்த ராஜபக்ச வருவது உறுதியாகியுள்ளது. இதனால் ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி போனில் வாழ்த்து தெரிவித்தார்.

இதனையடுத்து பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள ராஜபக்ச, இரு நாடுகள் இடையேயான நீண்டகால ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்த, இலங்கை மக்களின் வலுவான ஆதரவுடன் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.