அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!



maths-teacher-arrested-for-sexually-teasing-plus-two-st

புதுக்கோட்டை மாவட்டத்தில் +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ்(52). இவர் அதே பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். மேலும் அந்த மாணவியை தனது காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

tamilnadu

இது தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து மனைவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து புகாரளித்துள்ளனர். அவர்களது புகாரின் அடிப்படையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். இந்தப் புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வசந்தகுமார் நடத்திய விசாரணையில் வில்லியம் பால்ராஜ் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: "வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!

இதனையடுத்து பால்ராஜுக்கு எதிராக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் ஆசிரியர் பால்ராஜை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெற்றோர் மற்றும் மாணவிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: தனியார் பள்ளியில் கொடூரம்... 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! முதல்வர் கைது.!!