ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத் கிராமத்திலுள்ள தனியார் பள்ளியில் கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த வில்லியம்ஸ் பால்ராஜ்(52) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் சீண்டல் கொடுத்து வந்திருக்கிறார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் டிசி வாங்கிக்கொண்டு மாணவியை வேறு பள்ளியில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிக்கு டிசி கொடுத்ததாக குற்றம் சாட்டி அதே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளியில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நாடக காதல்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! ஆட்டோ ஓட்டுநர் கைது.!!
இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பினர் பள்ளியில் நடத்திய விசாரணையில் கணித ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல அமைப்பினர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் கணித ஆசிரியர் வில்லியம்ஸ் பால்ராஜை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!