தனியார் பள்ளியில் கொடூரம்... 14 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! முதல்வர் கைது.!!



principal-arrested-under-pocso-for-sexually-abusing-stu

தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தின் சிடுவம்பட்டி கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருபவர் கண்மலர். இவரும் இவரது கணவரும் இணைந்து ஏரியூர் மற்றும் அழகா கவுண்டனூர் ஆகிய 2 ஊர்களிலும் தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகனான வினுலோகேஸ்வரன் 2 பள்ளிகளுக்கும் முதல்வராக இருந்து வருகிறார்.

tamilnadu

33 வயதான லோகேஸ்வரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவி கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது பள்ளியின் முதல்வர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நாடக காதல்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! ஆட்டோ ஓட்டுநர் கைது.!!

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் பள்ளியின் முதல்வர் வினுலோகேஸ்வரனை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: "வாத்தியார் செய்யுற வேலையா இது..." +1 மாணவிக்கு பாலியல் சீண்டல்.!! கணித ஆசிரியர் கைது.!!