இந்தியா டெக்னாலஜி

நோக்கியா போனை விழுங்கிய நபர்!! ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..

Summary:


கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர்  21 ஆண்டுகளுக்கு மு


கொசோவோவில் உள்ள பிரிஸ்டினாவைச் சேர்ந்த 33 வயதான நபர் ஒருவர்  21 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட Nokia 3310 என்ற தொலைபேசியை விழுங்கியுள்ளார்.

செல்போனை விழுங்கியதை தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்ட அந்த நபர், தலைநகர் பிரிஸ்டினாவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை அணுகி விவரத்தை கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அந்த நபர் செல்போனை விழுங்கியிருப்பதும், அளவில் பெரிதான அந்த செல்போன் மற்றும்  தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கொண்ட அதன் அரிக்கும் பேட்டரி காரணமாக அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த மருத்துவர்கள், அந்த நபரின் வயிற்றில் இருந்து செல்போனை வெளியே எடுத்தனர். இந்நிலையில் அந்த நபரின் வயிற்றில் இருந்த செல்போன், செல்போனை வெளியே எடுக்கும் காட்சிகள் ஆகியவற்றை மருத்துவமனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த நபர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement