இந்தியா

100 அடி பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை..! கிணற்றுக்குள் இறங்கிய ஆஃபிசர்..! திக்.. திக்.. நிமிடங்கள்..!

Summary:

Man rescue leopard viral photos

100 அடி உயரமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை ஒன்றை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையை உயிருடன் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் அமைந்துள்ள காரபுரா பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அங்கு வந்த சிறுத்தை 100 அடி பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக அந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுத்தையை மீட்கும் முயற்சியுடன் வந்த வனத்துறையினர் அதற்காக மிகவும் அபாயகரமான முடிவுக்கு சென்றுள்ளனர்.

பாழடைந்து கிணறு என்பதால் கற்கள், மரம், இருள் சூழ்ந்திருந்தநிலையில் வனத்துறை அதிகாரி சித்தராஜ் என்பவரை இரண்டு அறைகள் கொண்ட இரும்பு கூண்டுக்குள்ள வைத்து, கையில் டார்ச்லைட் மற்றும் செல்போனை கொடுத்து கிணற்றுக்குள் இறக்கியுள்ளனனர்.

கிணற்றுக்குள் இறங்கிய வனத்துறை அதிகாரி சித்தராஜ், தனது அறைக்குள் இருந்தவாறு மற்றொரு அறையின் கதவை திறந்து சிறுத்தையை உள்ளே கொண்டுவர   முயற்சி செய்துள்ளார். ஆனால் சிறுத்தை கூண்டுக்குள் வரவில்லை. இதனை அடுத்து மறுநாள் சில இறைச்சித்துண்டுகளை வலைக்குள் வைத்து கிணற்றுக்குள் இறக்க, இறைச்சி துண்டுகளை சாப்பிடவந்த சிறுத்தை வலையில் சிக்கிக்கொண்டது.

பின்னர் சிறுத்தையை மேலே தூக்கி வலையில் இருந்த சிறுத்தையை அதிகாரிகள் கூண்டுக்குள் அடைத்தனர். மேலும், தனது உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தையை காப்பாற்ற போராடிய வனத்துறை அதிகாரி சித்தராஜ் அவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 


Advertisement