2 படங்களுக்கு ரூ.957 கோடி சம்பளம்... ஹாலிவுட்டையே மிரள வைத்த ராபர்ட் டௌனி ஜூனியர்!
ரஷ்யாவில் இருந்த நபர் மீது நீட் போராட்ட வழக்கு.. அதிர்ந்து போய் விளக்கமளித்த இளைஞர்.!
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பாக பீகாரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, தற்போது ரஷ்யாவில் வசித்து வரும் முகமது சதாகத் என்ற நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோவில் பேசிய அவர், கடந்த 4 மாதங்களாக ரஷ்யாவில் வசித்து வருவதாகவும், இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அப்படியிருக்கும்போது, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தன்னை எப்படி தொடர்புபடுத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில் தனது பெயர் FIRல் இடம்பெற்றிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும், இதனால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உண்மை நிலையை அதிகாரிகள் உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறிய முகமது சதாகத், உடனடியாக தனது பெயரை எஃப்.ஐ.ஆர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் உண்ணாவிரதம்?.. 4 நிபந்தனைகள் விதித்த வாங்சுக்..!
இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய வீடியோவும் கவனம் பெற்றுள்ளது. முகமது சதாகத்தின் கோரிக்கை குறித்து விசாரணை அமைப்புகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.