BREAKING: சற்று முன்... அதிர்ச்சி! மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகுவதாக பரவும் ராஜினாமா கடிதம்.? டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்டம்... பெரும் பரபரப்பு..!!!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவரது பெயரில் வெளியானதாகக் கூறப்படும் ராஜினாமா கடிதம் போலியானது என்றும், அவர் பதவி விலகவில்லை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.
வைரலான ராஜினாமா கடிதம்
கடந்த 21-ஆம் தேதி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி, அவரது பெயரில் தயாரிக்கப்பட்ட கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து பலரும் அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு வட்டாரங்கள், அந்தக் கடிதம் முற்றிலும் போலியானது என்றும், அமைச்சர் தொடர்ந்து தனது பொறுப்பில் உள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து வரும் ஆஃபர்.! பாஜகவும் களத்தில் இறங்கிட்டு... மாநிலம் தலைவர் பதவியா? திமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!!
நீட் விவகாரத்தில் போராட்டம் தீவிரம்
இதற்கிடையில், NEET தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. நாளுக்கு நாள் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நீட் விவகாரம் மீண்டும் தேசிய அளவில் அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: முடிவுக்கு வரும் உண்ணாவிரதம்?.. 4 நிபந்தனைகள் விதித்த வாங்சுக்..!