முடிவுக்கு வரும் உண்ணாவிரதம்?.. 4 நிபந்தனைகள் விதித்த வாங்சுக்..!
லடாக் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தனது உண்ணாவிரதத்தை முடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு மத்திய அரசு 4 நான்கு முக்கிய கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
மத்திய அரசு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்திய நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே போராட்டத்தை முடிப்பேன் என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
அதில், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பது முதல் கோரிக்கையாக உள்ளது. மேலும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பனையூர் பாபுவால் வெடித்த புது பூகம்பம்... முதல்வர் விஜய் மற்றும் வைகோவை உடனே கைது பண்ணுங்க! அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பு.!!!

அதேபோல், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நீட் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தனது கோரிக்கைகளில் தெரிவித்துள்ளார்.
சோனம் வாங்சுக் முன்வைத்துள்ள இந்த நான்கு கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு என்ன பதிலளிக்கிறது என்பது அரசியல் வட்டாரங்களிலும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: தள்ளுமுள்ளு... ராகுல் காந்திக்கு ரத்த காயம்....! பரபரப்பு போராட்டம்!!!