இரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த நபர்.. உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்.! பதைபதைப்பு வீடியோ.!Maharashtra Vasai Railway Station Man Try to Moving Train on Board He Slipped Rescued Life

ஓடும் இரயில்களில் ஏறுவதும், இறங்குவதும் உயிருக்கு உலைவைக்கும் செயல் என எச்சரித்தாலும், எதோ ஒரு காரணத்திற்காக விபரீத செயலை செய்யும் மனிதர்கள் அவ்வப்போது சிறு காயத்துடன் தப்பி விடுகின்றனர். சிலரின் உயிரும் பரிதாபமாக பலியாகிறது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாசை இரயில் நிலையத்தில், கடந்த 23 ஆம் தேதி பயணி ஒருவர் ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த போது தவறி கீழே விழுந்துவிடுகிறார். சில அடி தூரம் இரயிலுடன் இழுத்து செல்லப்பட்டவர், பக்கவாட்டில் உரசியவாறு தூக்கி எறியப்படுகிறார். 

நல்ல வேலையாக அவர் தண்டவாளத்திற்குள் விழாமல் தப்பித்த நிலையில், இரயில் நிலையத்தில் இருந்த பயணி மற்றும் பாதுகாப்பு படை அதிகாரி அவரை சமர்த்தியதுடன் காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டுள்ளது.