இந்தியா Covid-19

10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனுக்கு கொரோனா தொற்று..! 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா வந்தது எப்படி.?

Summary:

Maharashtra student affected by corono who wrote 10th exam

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 10-ம்  வகுப்பு தேர்வு எழுதிய மாணவன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மும்பை பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாணவனின் தந்தை சமீபத்தில் துபாயில் இருந்து வந்துள்ளார். அவரிடம் இருந்து மாணவனுக்கு கொரோனா பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவன் 10-ம்  வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இதனால் அந்த மாணவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 36 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த மாணவனுக்கு அருகில் தேர்வெழுதிய 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement