இந்தியா

மனைவி இறந்தது கூட தெரியாமல் 3 நாட்கள் சடலத்துடன் இருந்த கணவர்! நெஞ்சை உருகவைக்கும் சோக சம்பவம்!

Summary:

kalkaththa

கொல்கத்தாவின் நயினா பகுதியை சேர்ந்தவர் பாரதி சந்தா. 50 வயதான இவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் படுக்கை படுக்கையானார்.

இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி சந்தா படுக்கையில் இருந்தப்படியே இறந்துள்ளார். ஆனால் இவை அறியாத சந்தாவின் கணவர் மூன்று நாட்கள் அவர் கூடவே இருந்துள்ளார்.

அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனுப்பியுள்ளனர்.

சந்தாவின் கணவர் மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் மனைவி இறந்தது கூட தெரியாமல் மூன்று நாட்கள் சடலத்துடன் வாழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement