பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரிப்பு... எல்லை பாதுகாப்பு படை அதிர்ச்சி தகவல்..!!

பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரிப்பு... எல்லை பாதுகாப்பு படை அதிர்ச்சி தகவல்..!!


Illegal infiltration of drones from Pakistan increases... Border Security Force shocking information..!!

இந்திய எல்லைக்குள், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்துள்ளார். 

கடந்த பத்து மாதங்களில், இந்திய எல்லைக்குள் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து 266 ட்ரோன்கள் சட்டவிரோதமாக நுழைந்ததை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்துள்ளனர். அதில் 215 டிரோன்கள் பஞ்சாப் செக்டார் வழியாகவும், 22 ட்ரோன்கள் ஜம்மு செக்டார் வழியாகவும் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ட்ரோன்கள் மூலம் வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதிகளில் கேம்ப் அமைத்து இருக்கும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) டிரோன்களை ஆய்வு செய்ய டெல்லியில் இருக்கும் முகாமில் அதிநவீன ஆய்வகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எப்) இயக்குநர் பங்கஜ் குமார் சிங் கூறும் போது, 2022-ஆம் வருடத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து வரும் ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அனுப்புவது அதிகரித்துள்ளது. மேலும் ட்ரோன்கள், கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் உள்ள மின்னணு சிப்களைக் கொண்டுள்ளன. 

சுட்டு வீழ்த்தப்படும் டிரோன்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறோம். கடந்த 2020-ஆம் வருடத்தில் இந்திய, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 79 ட்ரோன்களை பிஎஸ்எப் கண்டுபிடித்துள்ளது. 2021- வருடத்தில்,109 ஆக ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வருடம் மட்டும் இந்தியாவிற்குள் ஊடுருவிய ட்ரோன்களின் எண்ணிக்கை 266 ஆக உள்ளது. இவற்றில் 215 டிரோன்கள் பஞ்சாப் எல்லையிலும், 22 டிரோன்கள் ஜம்பு எல்லையிலும் ஊடுருவின என்று கூறினார்.