பிருந்தாவனம் ஆசிரமத்தில் நீடிக்கும் மர்மம்! 16 வயது சிறுவனுக்கு என்னாச்சு? 3 மாசமா என் மகனைப் பார்க்கக் கூட விடல..... தர்ணா போராட்டத்தில் குடும்பத்தினர்கள்!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அனுஜ் குமார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிருந்தாவனில் உள்ள பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமத்திற்கு சென்று அங்கேயே தங்கியதாக கூறப்படுகிறது. தற்போது தங்கள் மகனை நேரில் சந்திக்க ஆசிரம நிர்வாகம் அனுமதிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆசிரமத்தின் வெளியே குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகனை சந்திக்க அனுமதி மறுப்பு என குடும்பம் புகார்
அனுஜ் குமார் ஆசிரமத்திற்கு சென்ற நாள் முதல் கடந்த மூன்று மாதங்களாக அவரை சந்திக்க முடியவில்லை என குடும்பத்தினர் கூறுகின்றனர். பலமுறை முயற்சி செய்தும் மகனை நேரில் பார்க்க அனுமதி கிடைக்காததால், தற்போது ஆசிரமத்தின் முன்பு அமர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சிறுவனின் தற்போதைய நிலை குறித்து தெளிவான தகவல் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: ஐயோ.. அவசரப்பட்டுடியேமா..! கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்! விவாசய கிணத்து அருகே கிடந்த செருப்பு, பை... கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!
முன்னதாகவும் இதேபோன்ற புகார்
இதற்கிடையே, இதே ஆசிரமத்தில் தங்கியிருந்த ரசிகா துலாரி என்ற பெண் உயிரிழந்த விவகாரத்திலும் அவரது குடும்பத்தினர் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தங்கள் மகளை சந்திக்க ஆசிரமத்தினர் அனுமதிக்கவில்லை என அப்போது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அந்த பின்னணியில் தற்போது சிறுவனின் குடும்பமும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.
விளக்கம் அளிக்க கோரிக்கை
ஆசிரமத்தைச் சுற்றி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அனுஜ் குமார் தொடர்பான புகாருக்கு நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, சிறுவன் எங்கு இருக்கிறார், குடும்பத்தினரை ஏன் சந்திக்க அனுமதிக்கவில்லை என்பது குறித்து பிரேமானந்த் மகாராஜ் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: என்னையவே ஏமாத்துறியா? காதலியின் கழுத்தை அறுத்த அடுத்த நொடி... காதலன் செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம்..!!!