என்னையவே ஏமாத்துறியா? காதலியின் கழுத்தை அறுத்த அடுத்த நொடி... காதலன் செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம்..!!!



vijayawada-lover-attacks-girlfriend-and-dies

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகம் விபரீதத்தில் முடிந்துள்ளது. நியூ ராஜராஜேஸ்வரி பேட்டை பகுதியில் காதலியின் கழுத்தை இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞர் கட்டிட மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

காதலியின் கழுத்தில் கத்தியால் வெட்டு

விஜயவாடா நியூ ராஜராஜேஸ்வரி பேட்டை பகுதியைச் சேர்ந்த மஹாலக்ஷ்மியும் சின்னராவும் சில காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மஹாலக்ஷ்மியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சின்னராவ் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல் பாகங்கள்! டாட்டூவை வைத்து கண்டுப்பிடித்த சகோதரர்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..! கொலைக்காரனை பிடித்த போலீஸ்..!!!

சம்பவத்தன்று கத்தியுடன் வந்த அவர், மஹாலக்ஷ்மியின் கழுத்துப் பகுதியில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறியுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கட்டிட மாடியில் இருந்து குதித்த இளைஞர்

காதலியை தாக்கிய பின்னர் சின்னராவ் அருகில் இருந்த கட்டிடத்தின் மாடிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து திடீரென கீழே குதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணை தீவிரம்

மஹாலக்ஷ்மி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, காதல் உறவில் ஏற்பட்ட சந்தேகம் தாக்குதலுக்கான காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: பொண்ணுங்களுக்கு தான் ஆபத்துன்னா இப்போ ஆண்களுக்குமா? 8 வயது சிறுவனை விளையாட கூட்டிட்டு போய் 2 வாலிபர்கள் செய்த கொடூரம்! வலி தாங்க முடியாமல் தாயிடம் கதறி அழுத மகன்.! பகீர் சம்பவம்..!!!