ஐயோ.. அவசரப்பட்டுடியேமா..! கணவன் மனைவிக்குள் வாக்குவாதம்! விவாசய கிணத்து அருகே கிடந்த செருப்பு, பை... கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!!!
விகாரபாத் மாவட்டம் புதூர் மண்டலத்தில் குடும்பத் தகராறால் தாய் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் விவசாயக் கிணற்றில் குதித்துள்ளார். இதில் தாய் மற்றும் 4 வயது மகள் உயிரிழந்தனர். 8 வயது மகனை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம்;
மாதுகுடெம் கிராமத்தைச் சேர்ந்த மமதா (28), தனது கணவர் ராஜுவுடன் நேற்று காலை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
கிணற்றருகே கிடந்த செருப்பு, பை
இதற்கிடையில் சோமநூர்த்தி கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றின் அருகே மமதாவின் செருப்புகளும், ஒரு பையும் கிடப்பதை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தாய், மகள் உடல்கள் மீட்பு; மகனை தேடும் பணி
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் கிணற்றில் சோதனை நடத்தினர். அப்போது மமதா மற்றும் அவரது 4 வயது மகள் ஜனஸ்ரீ ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. கிணற்றில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதப்படும் 8 வயது மகன் சாகேத்தை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத் தகராறைத் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கிணற்றில் சிக்கியிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
వికారాబాద్ జిల్లా పూడూరు మండలం సోమన్గూర్తి గ్రామ శివారులో విషాదం.
కుటుంబ కలహాలతో ఇద్దరు పిల్లలతో కలిసి
బావిలో దూకి తల్లి ఆత్మహత్య
మృతులను మాటుగూడెం గ్రామానికి చెందిన మమత,
ఆమె కుమార్తె జనశ్రీ (4)గా గుర్తించారు.
మరో కుమారుడు సాకేత్ (8) కోసం బావిలో గాలిస్తున్న పోలీసులు.
భర్త… pic.twitter.com/8YGSw8QKaZ— TNews Telugu (@TNewsTelugu) October 3, 2026