இப்படியெல்லாம் நடக்குமா? கோழிக்கறி சமைப்பதில் கணவன்- மனைவிக்கு ஏற்பட்ட மோதல்! அருகில் இருந்த 6 வயது சிறுமி பரிதாப மரணம்..! நடந்தது என்ன? பகீர் சம்பவம்..!!!!



gonda-family-dispute-six-year-old-girl-death

உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் கோழிக்கறி சமைப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. கரனைல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹாத்தி கிராமத்தில் ஏற்பட்ட மோதலின்போது, அவர்களின் 6 வயது மகள் மஹக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கோழிக்கறி சமைப்பது தொடர்பாக தகராறு

ஹாத்தி கிராமத்தில் கணவன்-மனைவி இடையே கோழிக்கறி சமைப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த 6 வயது சிறுமி மஹக்கின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அடக்கடவுளே... இத செய்ய எப்படித்தான் மனசு வந்துச்சோ..! அதிகாலையில் அடுக்கடுக்காக மனைவி, 3 குழந்தைகளை கோடரியால் வெட்டி... ரத்தம் சொட்ட சொட்ட வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த கணவன்! நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

இதையடுத்து சிறுமியை குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே காரணம் தெரியவரும்

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் வெளிப்படையாகத் தெரியும் காயங்கள் எதுவும் இல்லை என்று துணைக் காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே சிறுமியின் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தந்தையிடம் தீவிர விசாரணை

சிறுமியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது தந்தையை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறின்போது சிறுமிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும், மரணத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 6 வயது சிறுமி உயிரிழப்பு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதையும் படிங்க: நீங்களே ஒன்னு ஒன்னு சொல்லாதீங்க..! என் தம்பி ஐபோனுக்காக சாகல....! மலை சோகத்தின் பின்னணியில் மனம் உடைந்து உண்மையை உடைத்த சகோதரி....!!!