ஷாக் நியூஷ்! 5 ஆண்டு மட்டுமே கால அவகாசம்..! தவறினால் வேலையே காலி ... ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட புதிய சுற்றறிக்கை..!!!
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு முறைகளில் பணியில் சேர்ந்த உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறுவதற்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் வழங்கப்படும் என்றும், அதற்குள் தேர்ச்சி பெறாதவர்களின் தகுதிகாண் பருவம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு முறைகளில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு கட்டாயத் தேர்வு
கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், கீழ்நிலைப் பதவிகளில் இருந்து பணி மாறுதல் பெற்றவர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் இருந்து ஈர்க்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு பிரிவுகளில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த அறிவுறுத்தல் பொருந்தும்.
இதையும் படிங்க: 9 மணி நேரத்துக்கு மேலாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் அக்வான் புயல்!சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்..!!!
இவர்கள் தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையின் புதிய இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் பிரிவு 31(4)-ன்படி, தகுதிகாண் பருவத்தில் உள்ள பணியாளர்கள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை கால நீட்டிப்பு வழங்கலாம். இந்தக் கால அவகாசத்துக்குள் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
5 ஆண்டுகள் முடிந்தும் உரிய தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் தகுதிகாண் பருவத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் அவர்களைப் பணியில் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
விதிகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவு
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத ஊழியர்களை விதிகளின்படி பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேலை முடிந்து வீடு திரும்பிய அரசு செவிலியரை... நொடிப்பொழுதில் கூப்பிட்ட எமன்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!!