நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
நீங்களே ஒன்னு ஒன்னு சொல்லாதீங்க..! என் தம்பி ஐபோனுக்காக சாகல....! மலை சோகத்தின் பின்னணியில் மனம் உடைந்து உண்மையை உடைத்த சகோதரி....!!!
மகாராஷ்டிராவில் மலையிலிருந்து குதித்து சந்த்குடே குடும்பத்தினர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில், ஐபோன் வாங்கித் தருமாறு குணால் பிடிவாதம் பிடித்ததே காரணம் என தகவல்கள் பரவின. ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட தகராறுகளால் உருவான மன அழுத்தமே பின்னணியாக இருந்ததாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபோனுக்காக இந்த முடிவை எடுக்கவில்லை
ரக்ஷா பந்தன் நெருங்கி வரும் நிலையில், தனது சகோதரன் குணால் அருகில் இல்லாததை நினைத்து அவரது தாய்வழிச் சகோதரி வேதனை தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் குணால், அவரது அத்தை சங்கீதா, முரளி காக்கா குறித்து பரவும் வதந்திகளுக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண்! நொடியில் பெண்ணின் மேலேயே ஏறிய ராட்சத முதலை..! அடுத்து நடந்த ட்விஸ்ட்! பதைபதைக்கும் வீடியோ..!!!
குணால் பணத்திற்காகவோ, ஐபோன் 15 ப்ரோவுக்காகவோ இந்த முடிவை எடுக்கவில்லை என சகோதரி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரிடம் அந்த மாடல் ஐபோன் இருந்ததாகவும் கூறியுள்ளார். சிறுவயது முதலே பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்பட்ட குணாலுக்கு பணத்தின் மீது ஆசை இருந்ததில்லை என்றும், தனது தந்தை மீண்டும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய விருப்பமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்த அத்தை
கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் தொடர்பில் இல்லாத அத்தை திடீரென நெருங்கி வந்தது குணாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. முரளி காக்கா வெள்ளந்தியான குணம் கொண்டவர் என்பதால், அன்பாகப் பேசுபவர்களை எளிதில் நம்பிவிடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால், தந்தையை தன்னிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சம் குணாலுக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடும்பத்தில் நீடித்த பிரச்சினைகள் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என குடும்பத்தினர் வேண்டுகோள்
சகோதரன், அத்தை, மாமா என ஒரே நேரத்தில் மூவரை இழந்து நிற்பது தாங்க முடியாத துயரமாக இருப்பதாக குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மறைந்தவர்கள் செய்யாத செயல்களை அவர்களுடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குடும்பத்தின் துயரத்தை புரிந்துகொண்டு, உறுதி செய்யப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.